Google Groups Home
Help | Sign in
வேதத்தில் என்ன இருக்கிறது?
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  Messages 1 - 25 of 29 - Collapse all   Newer >
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post will appear after it is approved by moderators
இரவா  
View profile
 More options Jul 8, 2:30 am
From: "இரவா" <vasudevan...@gmail.com>
Date: Tue, 8 Jul 2008 12:00:19 +0530
Local: Tues, Jul 8 2008 2:30 am
Subject: வேதத்தில் என்ன இருக்கிறது?
ரிக் வேதம்

ரிக் வேதம் ஒரு மத நூலோ, தத்துவ சாஸ்திரமோ இல்லை. கவிதைகளின் தொகுப்பு

ரிக் வேதம் ஒரு மத நூலோ, தத்துவ சாஸ்திரமோ இல்லை. கவிதைகளின் தொகுப்பு

ரிக் வேதம் ஒரு மத நூலோ, தத்துவ சாஸ்திரமோ இல்லை. கவிதைகளின் தொகுப்பு.
ஆனால் அவை ஆதி ஆரியர்களின் சமுதாய அமைப்புகளையும், சமூக உறவுகளையும்,
நாகரிக நிலவரத்தையும் பிரதிபலிக்கின்றன.

அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பது மட்டுமல்லாது அவர்களது மத
நம்பிக்கைகளும், சிந்தனைகளும், ஆசா பாசங்களும் எப்படிப்பட்ட தரத்தில்
இருந்தன என்பது போன்றவற்றை ரிக் வேதத்தில் இருந்து ஓரளவிற்குத் தெரிந்து
கொள்ள முடியும்.

ஆதி ஆரியர்களுக்கு நூல்கள் இல்லை. அவர்கள் எழுதவும் படிக்கவும்
தெரியாதவர்கள், காட்டுமிராண்டிகள், கவிதை மயமான ஸூக்தங்களும்,
பிரார்த்தனைகளும் உருப்போட்டு மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டு
இருந்தது அல்லாது வேறெந்த வழியும் இல்லை.

நாம் வேதங்கள் என்று அழைக்கின்றவை இப்படி தலைமுறை தலை முறையாக வாக்கால்
உச்சரித்து பரப்பப்பட்ட ஸூக்தங்களும் மந்திரங்களின் தொகுப்புகள்தான் அந்த
மந்திரங்களும் ஸூக்தங்களும் ஒரே கவிஞராலோ ஒரே காலத்திலோ
உண்டாக்கப்பட்டதல்ல.

பலராலும் பல்வேறு கால கட்டங்களில் சொல்லப்பட்டு பின்னால் ஒன்று
சேர்க்கப்பட்டவைகளாகும். ``விண்டர்றிஸ்'' அபிப்பிராயப்படுவது போல ரிக்வேத
ஸூக்தங்கள் ரசிக்கப்பட்ட காலத்திலும் பின்னால் ரிக்வேத சம்கிதை என்ற
பேரில் ஒழுங்குபடுத்தப்பட்ட காலத்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகள்
கடந்து இருக்கும்.

வேதங்கள் இரண்டு கால கட்டங்களில் தழைத்து வளர்ந்தன. ரிஷிகளோ,
புரோகிதங்களோ என்று கருதப்பட்ட பல தரப்பட்ட கவிகள் ஸ்தோத்திரங்களை
ரசித்து பாடினர்.

பாடத் தொடங்கிய காலம்தான் முதன்மைக் கட்டம். பலரும் பல கட்டங்களில்
பாடப்பட்டவைகள், தலைமுறை தலைமுறையாக ஓதப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான
ஸ்தோத்திரங்களை ரிக்வேதம், சாமவேதம், யஜுர் வேதம், அதர்வண வேதம் என்று
நான்கு சம்கிதைகளாக பாகுபடுத்தி பிரித்தவை இரண்டாம் கட்டம். இந்த இரண்டு
கால கட்டத்திற்கும் இடையில் அநேக நூற்றாண்டு இடைவெளி உள்ளது.

பத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ரிக்வேத சம்ஹிதையில் ஒட்டு மொத்தமாக
10,000 பாதங்கள் அடங்கிய 1017 சூக்தங்கள் உள்ளன. அநேக சூக்தங்கள் தொகுக்க
முடியாதபடி மறந்து போய்விட்டன என பண்டிதர்கள் கருதுகின்றனர்.
தொகுக்கப்பட்ட ஸ்தோத்திரங்களும் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு
பாடப்பட்டவைகளாகும் என `மாக்டொனால்டு' கூறுகிறார்.

ரிக் வேதத்தில் முதல் கால கட்டத்தில் உள்ள கவிதைகள் கி.மு. 1200க்கும்
கி.மு.1000த்துக்கும் இடையிலும் மீதமுள்ளவை கி.மு.1000த்துக்கும் கி.மு.
800+க்கும் இடையில் பாடப்பட்டவையாகும் என மாக்ஸ்முல்லர் கருதுகின்றார்.
ரிக் வேதத்தின் கூடுதலான பழைய கீதங்கள் கிருஸ்துவின் 1200 ஆண்டுகளுக்கு
முன்பு ரசிக்கப்பட்டவையாக இருக்க வேண்டுமென்று ராப்சன்
அபிப்பிராயப்படுகின்றார்.

E.C. Rapson Ancient India பாலகங்காதர திலகர் கி.மு. 4500க்கு முன்பு
ரிக்வேத சூக்தங்கள் நிலவில் இருந்தது என்று வாதிக்கிறார்.
ராதாகிருஷ்ணனின் அபிப்பிராயத் தில் உள்ளதை நாம் சம்மதிக்க வேண்டிவரும்
(S. Radhakrishnan, India Philosophy Vol.IP.3)

நன்றி:

http://www.tamilcircle.net/unicode/general_unicode/165_general_unicod...

--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thamizayam@googlegroups.com


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Tthamizth Tthenee  
View profile
 More options Jul 8, 6:15 am
From: "Tthamizth Tthenee" <rkc1...@gmail.com>
Date: Tue, 8 Jul 2008 15:45:10 +0530
Local: Tues, Jul 8 2008 6:15 am
Subject: Re: [MinTamil] வேதத்தில் என்ன இருக்கிறது?

அறிஞர்கள் அளிக்கும் செய்திகளைப் படிக்கவே
கொடுத்து வைத்திருக்க வேண்டும்
அந்தக் கொடுப்பினை எனக்கு இருக்கிறது
அதுவே மனதுக்கு சந்தோஷம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/7/8  இரவா <vasudevan...@gmail.com>:


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
இரவா  
View profile
 More options Jul 9, 5:13 am
From: "இரவா" <vasudevan...@gmail.com>
Date: Wed, 9 Jul 2008 14:43:32 +0530
Local: Wed, Jul 9 2008 5:13 am
Subject: வேதத்தில் என்ன இருக்கிறது?
'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்... '
1920 களில் இரக்கால் தாஸ் பானர்ஜியாலும் சர் ஜான் மார்ஷலாலும் சிந்து
சமவெளியில் மிகப்பழமையானதோர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட போது, இந்திய
நாகரிகத்தின் தொடக்க காலமென மேற்கத்திய இந்தியவியலாளர்கள்
நிர்ணயித்திருந்த காலமான கி.மு.1500 பின்னோக்கி தள்ளப் பட வேண்டியது
அவசியமானது. அத்துடன் அது இந்திய கலாச்சாரத்துடனேயே உறவற்றதோர் புதிராக
அறியப்பட்டது. எனினும் அகழ்வாராய்வாளர்கள் தொடர்ந்து பண்பாட்டு
தொடர்ச்சியினை நிறுவும் விதமான கண்டுபிடிப்புகளை கண்டு வந்தனர். எனவே
ரிக் வேத கால நாகரிகத்துக்கு தொடர்பற்ற அதற்கு முந்தையதோர் பண்பாடாக
சிந்து சமவெளி நாகரிகம் அறியப்படலாயிற்று. இதனைத் தொடர்ந்து எழுப்பப்
பட்ட ஆரியப்படை யெடுப்பு / புலப்பெயர்வு கோட்பாட்டுச் சித்திரம்
பின்வருமாறு அமைகிறது:

1. வேதங்களில் கூறப்படும் ஆரியர்களின் எதிரிகளான பூர்வீகக்குடிகள் உயர்
நாகரிகத்துடன் வாழ்ந்த நகரவாசிகள். அந்நகரங்களை அழித்த படையெடுப்பாளர்களே
ஆரியர்கள்.

2. ஆரியர்கள் இயற்கையை குறிப்பாக நெருப்பினை வழிபடும் நாடோடிகள். சோம பான
சடங்குகள் ஆரியர்களின் சமய வாழ்வில் முக்கியமானவை. சிந்து சமவெளி மக்களோ
உயர் தெய்வ வணக்கம் உடையவர்கள், குறிப்பாக சிவன் மற்றும் தாய் தெய்வ
வழிபாடு.

3. சிந்து சமவெளி மக்கள் கடல் பயணம் செய்பவர்கள். ஆரியர்கள் கடல்
குறித்து அறியாதவர்கள்.

4. சிந்து சமவெளி மக்கள் எழுத்து வடிவம் பெற்ற மொழி
கொண்டவர்கள்.ஆரியர்கள் எழுத்தறிவற்றவர்கள்.

5. வேத கலாச்சார இறுதிச்சடங்கு உடலை எரிப்பதாகவும் சிந்து சமவெளியிலோ
புதைப்பதாகவும் உள்ளது.

இந்த உயரிய நாகரிகத்தின் மீது விழுந்த 'வேத இருட்காலத் திரை '
விலகுகையில் நாம் காண்பது வர்ணாஸ்ரம தர்மம் சார்ந்த சமுதாயமும், அதில்
விஷ்ணு,சிவன், சூரியன் மற்றும் அன்னைத் தெய்வங்களை மையம் கொண்ட
சமயமும்.அகழ்வாராய்வு கண்டுபிடிப்புகள் மூலம் இக்கருத்தியலுக்கு முக்கிய
வடிவம் கொடுத்தவர் சர் மொர்ட்டிமர் வீலர். தற்போது மிகவும் பிரசித்தி
பெற்று விட்ட அவரது வார்த்தைகளில் 'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்,
மொஹஞ்சதாரோவில் பேரழிவையும் படுகொலை களையும் நடத்தியதற்காக. '

'...ரிக்வேத யதார்த்தத்தினூடே பயணிக்கும் உணர்வு... '

1960 களில் வீலரின் கோட்பாட்டினை மேலும் உறுதிப்படுத்த சிந்து சமவெளி
பகுதிகளில் மேலும் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட அமெரிக்க அகழ்வாய்வு நிபுணர்
ஜியார்ஜ் டேல்ஸ் மிகுந்த ஆச்சரியமடைந்தார். வீலரின் பல முடிவுகள்
வெளிப்படையாகவே தவறானவையாக இருந்தன. திறமையானவரும் சர்வதேச அளவில்
அகழ்வாய்வு பிதாமகருமான வீலர் எவ்விதத்திலும் படுகொலை என கருத
முடியாததோர் சூழலை படுகொலையாக மாற்றியிருப்பதை கண்டார். உதாரணமாக
ஆரியப்படையெடுப்பில் மண்டை உடைக்கப்பட்டு இறந்ததாக வீலர் கண்ட
மண்டையோடொன்று காயம் ஆறி பல வருடங்கள் உயிர்வாழ்ந்ததற்கான சான்றுகளுடன்
இருந்தது. டேல்ஸ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,
'படையெடுப்பும் படுகொலையும் நடந்திருந்தால் எரிக்கப்பட்ட கோட்டைகள் எங்கே
? அம்பு முனைகளும், ஈட்டிகளும், உடைபட்ட (படையெடுத்தோரின்) தேர்களும்,
படையெடுத்தோர் மற்றும் படுகொலைச் செய்யப்பட்டவர் களின் சடலங்களும் எங்கே
? ...மிகக் கடினமான, முழுமையான அகழ்வாராய்ச்சிக்குப் பிறகும், ஆராயப்பட்ட
எந்த சிந்து சமவெளி நாகரிக மையமும், ஆயதமேந்திய ஆரியப் படையெடுப்பின்
விளைவாக வீழ்ந்ததற்கு எந்த சான்றும் இல்லை. '1 எனில், இந்த நாகரிகம்
எவ்வாறு சுவடற்று அழிந்தது ? அந்நாகரிகம் அழியவில்லை மாறாக இன்றும்
வாழ்கிறது என்கின்றனர் பல அகழ்வாய்வாளர்கள். இன்றும் தொடரும் வேத
நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்குமான இடைவெளியின்
போலித்தன்மையினை அகழ்வாய்வு

வெளிப்படுத்தி வந்தது. உதாரணமாக மிகவும் பிரபலமானதாக கருதப்படும், சிந்து
சமவெளி நாகரிக முத்திரையான ஒற்றைக் கொம்பு விலங்கு ஆராய்ச்சியாளர்களால்
ரிக் வேத சின்னங்கள் மூலம் அறியப்படுகிறது. 'அவ்விலங்கின் முன்
காணப்படும் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு சோம பானச் சடங்குடன்
தொடர்புபடுத்தப்படுகிறது. '2 மேலும் ஆரியர்களுக்கே உரியதாக அறியப்பட்ட
நெருப்பு வழிபாட்டுடன் தொடர்புடைய வேள்வி பீடங்கள் சிந்து சமவெளி
நாகரிகத்தின் பல தளங்களிலும் அறியப்பட்டுள்ளது. 'சல்ப சூத்திரம் மற்றும்
சதாப்த பிரமாணம் ஆகியவற்றில் வேத வேள்விக்காக அமைக்கப்படும்
சூத்திரங்களுக்கும் ஹரப்பா அகழ்வாய்வில் காணப்படும் உறைந்த கணித
அறிவிற்கும் ...

read more »


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Narayanan Kannan  
View profile
 More options Jul 9, 7:56 pm
From: "Narayanan Kannan" <nkan...@gmail.com>
Date: Thu, 10 Jul 2008 08:56:53 +0900
Local: Wed, Jul 9 2008 7:56 pm
Subject: Re: [MinTamil] Re: வேதத்தில் என்ன இருக்கிறது?
அன்பின் ஸ்ரீவத்சன்:

வேதம் என்பதை "மறைமொழி" என்றுதான் தமிழ் கூறும் நல்லுலகம் சொல்கிறது.
எந்தத் தமிழ் அறிஞரும் (வள்ளுவர் காலத்திலிருந்து) இந்த
definition-லிருந்து மாறவில்லை. வேதத்தின் பொருள் உணர்தலே வாழ்வின்
பெரும் கடன் என்றுதான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் சொல்லுகின்றனர்.
நீங்கள் சுட்டும் அரவிந்தர்வரை அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.
காலனித்துவ ஆட்சியாளர்கள் தங்கள் இறையாண்மையை இந்தியாவில் புகுத்த
முற்படும் போது இவர்கள் மிகவும் மதித்துப் போற்றும் வேதத்தை வெறும்
ஒற்றைப் பரிமாணத்தில் விளக்க முற்பட்டனர். எப்படி ஆங்கிலக் கல்வி என்பது
நமது வேர்களை அறுக்கப்பயன்பட்டதோ அதே போல் வேதத்தை இகழ்தலும் நம் வேர்களை
நம்மிடமிருந்து பறிக்க முயல்வதே. குரான், விவிலியம் (பைபிள்) இவைகளிலும்
ஆயிரக்கணக்கான குறைகளை எடுத்துக் காட்ட முடியும்! ஆனால் வேதத்தை
இழிப்பவர்கள் இத்துறைக்குள் போகமாட்டார்கள். பலன் ஏடாகூடமாக
முடிந்துவிடும் என்று நன்றாகத் தெரியும். ஆனால் இந்திய சமய ஒழுங்கு
வேதத்தைக் கேள்வி கேள்! என்று தைர்யமாகவே சொல்கிறது! நரேந்திரனாக இருந்து
விவேகாநந்தராக மாறிய ஒரு இந்தியரின் வாழ்வே இதற்குச் சான்று.

கேள்வி கேட்பது என்பதும் ஒரு கலை!

கண்ணன்

2008/7/9 Srivatsan R <vaidhi...@gmail.com>:


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Tirumurti Vasudevan  
View profile
 More options Jul 9, 9:36 pm
From: "Tirumurti Vasudevan" <agnih...@gmail.com>
Date: Thu, 10 Jul 2008 07:06:12 +0530
Local: Wed, Jul 9 2008 9:36 pm
Subject: Re: [MinTamil] Re: வேதத்தில் என்ன இருக்கிறது?
கண்ணன் இதில் வெகு கெட்டிக்காரர் போல் இருக்கிறது!
:-))
ஸ்ரீவத்ஸன், நீங்கள் இப்படி எழுதுவதைவிட கட்டுரையில் என்ன தவறுகள் உள்ளன
என்று சுட்டிக்காட்டலாம். ஒட்டுமொத்தமாக தவறுகள் உள்ளன சொல்லை மாளாது
எனில் அப்படியே எழுதலாம்.
அல்ல