Web Images Videos Maps News Shopping Gmail more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Recent pages and files
அன்புடன் வரவேற்கிறோம்    

அன்புடையீர்,

உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே


இதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.

இது தமிழர்களுக்கான குழுமம்.

யுனிகோடு தமிழ் - யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும்.

உலகின் முதல் யுனித்தமிழ் கூகுள்குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு.

இங்கே கௌரவமான விசயங்களே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.

தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும்.

இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.

அன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்குள் ஏறத்தாழ ஆயிரம் அன்பர்கள் தொண்ணூறாயிரம் மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இவை தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எண்ணிக்கைகளாகும்.

உங்களைப் பற்றி அறியத் தாருங்கள். உங்கள் பெயர், ஊர் விபரங்களையும், அன்புடன் குழுமத்தைப் பற்றி நீங்கள் எப்படி அறிந்தீர்கள் என்றும், அன்புடனில் இணைய விரும்பியதன் காரணத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன் அறிமுகம் என்ற இழையில் பதில் பொத்தான் அழுத்தி உங்கள் அறிமுகத்தை அன்புடனுக்கு அனுப்பவும். நன்றி.

எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு அன்புடன் ஓர் சேவையாகச் சொல்லித்தருகிறது. மேலும் இணையம் மின்னஞ்சல் யுனித்தமிழ் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் அன்புடன் தீர்த்துவைக்கிறது.

உங்களின் அவ்வப்போதய உதவிகளுக்கு, anbudansupport@gmail.com என்ற முகவரிக்கு மடல் அனுப்புங்கள்.

மேலதிக தகவல்களுக்கு:
http://buhari.googlepages.com/anbudan.html

Version: 
அன்புடன் உதவி 401Bytes Jan 29 2007 Sep 22 2008
அன்புடன் உதவி 14.7KB Jan 29 2007 Sep 22 2008
அன்புடன் உதவி 8.3KB Jan 29 2007 Oct 16 2007
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google