Web Images Videos Maps News Shopping Gmail more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Recent pages and files
அன்புடன் கொள்கைகள்    

அன்பிற்கினிய அன்பர்களே,

உங்கள் அனைவருக்கும் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் அன்புடனின் அன்பான வணக்கம்.

இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே


இதுதான் அன்புடனின் மூச்சு. இதனைக் கொண்டே அன்புடனில் அன்பர்களுக்கிடையில் எப்போதும் பேச்சு.

அன்புடனுக்கென்று திடமான கொள்கைகள் உள்ளன. அவற்றை அன்புடன் அன்பர்கள் அறிவார்கள் என்றாலும், புதிதாக சேருபவர்கள் அறியும் வண்ணம் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன:


அன்புடன் கொள்கைகள்

1. அன்புடன் தமிழில் உரையாடுவோருக்கான குழுமம். தமிழ் அறியாதவர்கள் இதில் பங்குபெற முடியாது. தமிழில் உரையாடும் ஜார்ஜ் ஹார்ட்டை அன்புடன் இணைத்துக்கொள்ளும். தமிழ் எழுதத் தெரியாத தமிழ்ச்செல்வனை நிராகரிக்கும்.

2. அவசரகாலத் தேவைகளை மனதில் கொண்டு அன்புடனில் The Only English Thread in Anbudan என்ற ஓர் இழை ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழில் தட்டச்ச இயலாத உண்மைச் சூழலில் முக்கியமான தகவல்களையும் விபத்து, மரணம், சுனாமி போன்ற அவசர விசயங்களையும் அறிவிக்க இவ்விழையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

3. அன்புடன் யுனித்தமிழில் மட்டுமே இயங்கும். உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு. இங்கே திஸ்கி, தாம், டாப் போன்று வேறு எந்த தமிழெழுத்துத் தரத்தோடும் எழுத அனுமதியில்லை.

4. அன்புடனில் கௌரவமான விசயங்களே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை. எது கௌரவம் எது ஆபாசம் என்பவற்றை அன்புடன் மட்டுமே தீர்மானிக்கும். இதில் சர்ச்சைக்கு இடமில்லை.

5. அன்புடனில் தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், செய்திகள், துணுக்குகள், பாடல்கள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான மற்றும் சுமுகமான தலைப்புகளிலேயே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டுமே இக்குழுமத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

6. அன்புடனில் மதங்களை சாதிகளை இனங்களைக் காயப்படுத்தும் விதத்தில் மடல்கள் அனுமதிக்கப்படாது.

7. அன்புடனில் இதயங்களை நோகடிக்கும் நோக்கத்தோடு பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் மடல்கள் இடக்கூடாது. கருத்துக்களால் கடும் மோதல்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் தனிமனிதக் கீறல்கள் அனுமதிக்கப்படாது.

8. அன்புடனிலோ, அன்புடனின் நிர்வாகிகளிடமோ, அன்புடன் உதவிக் குழுவினரிடமோ எவரும் குறைகள் கண்டால், அவற்றை அன்புடன்-உதவி AnbudanSupport@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டும். அதுவன்றி அன்புடனில் நேரடியாக மடல்கள் இடக்கூடாது. நிர்வாகிகளின் முகவரிகளுக்கும் மடல்கள் இடக்கூடாது. அன்புடன் உதவிக் குழுவினருக்கும் மடல்கள் இடக்கூடாது.

9. அன்புடன்-உதவியிலிருந்து எந்த ஒரு விவாதத்தையும் நிறுத்தக்கோரி மடல் வந்தபின் அன்பர்கள் அதில் தொடர்ந்து விவாதம் செய்யக்கூடாது. அவர்களின் விவாதத்தை அன்புடன்-உதவிக்குத் தனிமடலாக அனுப்பிவைக்கலாம். அவை பரிசீலிக்கப்படும்.

10. அறிந்தே அன்புடன் கொள்கைகளை மீறும் அன்பர்கள் அன்புடன்-உதவியினரால் கண்டிக்கப்படுவார்கள். பிரச்சினை அதிகம் ஏற்படும் பட்சத்தில் பிரச்சினைக்குரிய அன்பர் நீக்கப்படக்கூடும். இது தொடர்பான விவாதங்களை அன்புடன்-உதவிக்குத் தனிமடலில் இடலாமே தவிர அன்புடனுக்குள் இடக்கூடாது.

இந்தக் கொள்கைகள் தரும் ஒழுங்கில், அன்புடன் மேலும் செழித்து வளரும் என்ற நம்பிக்கை அன்புடனுக்கு உண்டு. இந்தக் கொள்கைகளில் மாற்றம் விரும்புவோரும் வாழ்த்துத் தெரிவிப்போரும் மறவாமல் அன்புடன்-உதவிக்குத் தனிமடல் இடுங்கள்.


மேலதிக தகவல்களுக்கு:
http://buhari.googlepages.com/anbudan.html

Version: 
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google