Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Recent pages and files
அன்புடனைப் பற்றி...    

அன்பிற்கினிய அன்பர்களே,

இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே


இந்த எண்ணத்துடன் மார்ச் 7, 2005 துவங்கப்பட்ட அன்புடன் குழுமம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக யுனித்தமிழ் மடலாடற்குழுக்களின் வரிசையில் மிகவும் உயிரோட்டமாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

 

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!

அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கவிதைப் போட்டியின் முடிவுகளைக் காண இங்கே செல்லவும்.

 


அன்புடன் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் சில:

அன்புடன் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் சில:

* தமிழ், செம்மொழித் திட்டம், தமிழ் இலக்கணம், தமிழ் மற்றும் தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் புத்தாண்டு, சங்கத்தமிழ்ப் பாடல்கள், சித்தர் பாடல்கள்

* யுனித்தமிழும் கூகுள்குழுமமும், யுனித்தமிழ் உதவி

* நிகரான தமிழ்ச்சொல்
 (தற்கால மற்றும் கணித்துறை ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களின் தேடல்)

* அகராதியில் இல்லாத சொல்
 (அகராதியில் இல்லாத தமிழ்ச் சொற்கள், வட்டார வழக்கு)

* வெண்பா வகுப்பு

* கவிதைப் போட்டி: இயல், இசை, ஒலி, படம், காட்சி என்ற ஐவகைச் சுவைகளில் (2007)

* புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள்

* அன்புடன் கவிஞர்களின் கவிதைப் பக்கங்கள், அன்புடன் எழுத்தாளர்களின் கதை, கட்டுரைப் பக்கங்கள்

* அன்புடனின் முதல் கவியரங்கம்: "எனக்குப் பிடித்த நிறம்"

* அன்புடனின் இரண்டாவது கவியரங்கம்

* அன்புடனின் மூன்றாவது கவியரங்கம், சக்தி சக்திதாசன் தலைமையில்:
   இது குற்றாலம் கொட்டும் காலம்
   பங்கேற்க வாருங்கள்:

   http://groups.google.com/group/anbudan/t/871fe796605a0494

* புதிய கவிஞர்களுக்கு ஊக்குவிப்பு - "கவிதை எழுதலாம் வாங்க", "படம் இங்கே, கவிதை எங்கே", "வாழையடி வாழை - கவிதைக்குக் கவிதை". அன்புடன் தரும் ஊக்குவிப்பில், கவிதையே எழுதியிராதவர்கள் அன்புடனில் இணைந்ததும் கவிதையெழுதத் துவங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்

* "எது கவிதை?", "நானும் கவிதைகளும்" - ஓர் அலசல்

* சுட்ட கவிதைகள், படித்தவை பிடித்தவை, என்னைக் கவர்ந்தவை

* காதல்! காதல்! காதலைப் பற்றி ஏராளமான கவிதைகள், கதைகள், கருத்தாடல்கள்

 

* சிறப்புக் கருத்தாடல் களங்கள்
  மெய்ஞானம்
  விஞ்ஞானம்
  கடவுள்
  முதியோர் வாழ்வு
  நாடி ஜோதிடம்

* பட்டிமன்றங்கள்
1. மிகவும் இனிமையானவை: பழைய பாடல்களா புதுப் பாடல்களா?
2. காதல் குளத்தில் கல்லெறிவது ஆண்களா பெண்களா?"

3. இன்றைய இளைய சமுதாயம் நல் வழியில் செல்கிறதா இல்லையா?


* தித்திப்பு யுத்தங்கள்
1. காதல் நட்பாக மாறுமா?
2. ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறையா?
3. ஓடிப்போனவள்: யார் குற்றவாளி?
4. எது தெய்வீகக் காதல்?
5. ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா?
6. அதிகம் பேசுவது ஆண்களா பெண்களா?
7. அரசியல்
8. புலம்பெயர் வாழ்க்கை

9. திரைப்படப் பாடல்களுக்கு முக்கியமானது எது?
10. நட்பில் சிறந்தது எது?

11. நம்மைப் பெரிதும் ஆள்பவை எவை?


* அறிவியல் கேள்வி பதில்கள், மருத்துவக் குறிப்புகள்

* இந்தியப் பெருமை, இந்திய சுதந்திரம்

* வரதட்சணை, பெண்ணுரிமை

* மரண தண்டனை

* கதைகள், கட்டுரைகள், மின் நூல்கள், புத்தக விமரிசனங்கள்

* சுவாரசியமான புகைப்படங்கள், வீடியோக்கள்

* அன்புடன் அன்பர்களின் அறிமுகம், அன்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம், அன்பர்களின் "நாலு விசயங்கள்" சங்கிலித் தொடர் பதிவுகள்

* மலரும் நினைவுகள், பள்ளி, கல்லூரி நாட்களின் நினைவுகள், மறக்கமுடியாத தருணங்கள்

* "ஊர் சுற்றலாம் வாங்க" - சுவாரசியமான பயணக் கட்டுரைகள்

* மூளைக்கு வேலை தரும் புதிர்கள், விடுகதைகள், கணக்குகள்

* நகைச்சுவைப் பக்கங்கள், குறுந்தகவல்கள், செய்திகள், துணுக்குகள், சிந்தனைத் துளிகள்

* திரைப்படப் பாடல்கள், திரைக்கவிதைகள், திரைவிமரிசனம் (பிறமொழித் திரைப்படங்கள் உட்பட)

இதுபோல இன்னும் பலதரப்பட்ட விசயங்களை இந்த ஒரு வருடத்தில் மிகச் சிறப்பாகக் கலந்துரையாடியிருக்கிறோம் என்பதைப் பெருமையுடன் நினைவுகூரலாம். இவையனைத்தும் இன்னும் பலவும் அடங்கிய இனிய தமிழ்ச்சுரங்கமே அன்புடன் குழுமம்.

*

துவங்கிய முதல் ஆண்டிலேயே இணையத் தமிழ் உலகில் சரித்திரம் படைத்த குழுமம் அன்புடன்.

மார்ச் 7, 2006 வரை முதல் ஆண்டில் குவிந்த மடல்கள்: ~28750
இன்றைய தேதி வரை குவிந்துள்ள மடல்கள்: ~90,000

இன்றைய உறுப்பினர் எண்ணிக்கை: 1175+

*

இத்தருணத்தில் அன்புடன் உதவிக்குழு அன்புடன் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. நாள்தோறும் அன்புடனில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வரும் அனைத்து அன்பர்களுக்கும் முதல் நன்றிகள். அன்புடன் உதவிக் குழுவில் அன்புடன் மேலாளர்களாகப் பங்கேற்ற அன்பர்களின் இன்றியமையாத சேவைக்கு அன்புடனின் அன்பான நன்றி. அன்புடன் ஆலோசனைகளில் பங்கேற்ற அன்பர்களின் அக்கறையான கருத்துக்களுக்கும் யோசனைகளுக்கும் மிகுந்த நன்றி. அன்புடனின் நன்னடத்தையிலும் நலனிலும் அக்கறை காட்டி, சிரமங்கள் தலைகாட்டியபோது அன்பாய் விசாரித்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி.

*

அன்புடன் அன்பர்களால் ஆனதே அன்புடன். அன்புடனில் எழுதத் துவங்குங்கள். உங்கள் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், கருத்துக்கள் அன்புடனில் வரவேற்கப்படுகின்றன. எழுதுவோரை ஊக்குவியுங்கள். புதிதாய் எழுதத் தொடங்குவோருக்கு உங்கள் ஊக்குவிப்பும் அரவணைப்பும் மிகவும் இன்றியமையாதது. அன்புடனின் வளர்ச்சி நம் அனைவரின் கையிலும் தான் உள்ளது. அன்புடன் குழுமத்தை இன்னும் வளமாய், நலமாய் அமைக்க வாருங்கள். நன்றி.

மேலதிக தகவல்களுக்கு:
http://buhari.googlepages.com/anbudan.html

Version: 
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google